காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்பு பாடையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் செக்டாரில் உள்ள சுத்புரா பகுதியில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், நேற்று நள்ளிரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் சுட்டுக் கொன்றனர்.

இருப்பினும், அவரது கூட்டாளி ஒருவர் மீண்டும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பிச் சென்றுள்ளார். இதில் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானின் சயத்புராவை சேர்ந்த 32 வயதான முகமது ஷகுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து காலையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஒரு ஏகே ரக துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistani terrorist who tried to infiltrate into Kashmir was shot dead


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->