பஞ்சாப்: பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எஃப்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ராஜதல் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பறந்து வந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை நேற்று இரவு 7:40 மணியளவில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், குவாட்காப்டர் எல்லை வேலிக்கு அருகில் உள்ள வயலில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் மீட்கப்பட்டது. மேலும் ட்ரோனிலிருந்து அப்பகுதியில் ஏதேனும் சரக்குகள் கிழே விழுந்துள்ளதா என்பதை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக எல்லை பாதுகாப்புப் படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மட்டும் பஞ்சாபில் இதுபோன்று 3 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan drone shot down by BSF in Punjab


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->