பஹல்காம் தாக்குதல் & ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் இன்று தீவிர விவாதம்!
Pahalgam attack & operation Sindhu Intense debate in the parliament today
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம்நடைபெறஉள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’, மற்றும்குறித்து பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 28) தொடங்கும் விவாதம் தேசிய கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடந்த 21-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து விவாதம் கோரி அமளியில் ஈடுபட்டனர்,இதையடுத்து மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் சமரசத்தில் ஈடுபட்டு, விவாதம் நடத்த ஒப்புதல் பெற்றது
இந்தநிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடைபெறவுள்ளதால் நேரம் நீடிக்கப்படலாம்,மக்களவையில் இன்று, மாநிலங்களவையில் நாளை (செவ்வாய்) விவாதம் நடைபெறும் 16 மணி நேர விவாதம் (நீட்டிக்கப்படலாம்)
முக்கிய பிரச்சனைகள்:பஹல்காம் தாக்குதல்,ஆபரேஷன் சிந்தூர்,இந்தியா-பாகிஸ்தான் திடீர் பதற்றம்,டிரம்பின் கடந்த கருத்துகள்: "சண்டையை நிறுத்தியது நான்தான்" — இதுவும் விமர்சனப் பொருளாகும்
ஆளும்கட்சி தரப்பில்:அமித்ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு), ஜெய்சங்கர் (வெளியுறவுத்துறை)பிரதமர் மோடி குறுக்கிடல்களிலும் பதில்களிலும் ஈடுபடலாம்
எதிர்க்கட்சி தரப்பில்:ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க உள்ளனர்
இந்த விவாதம் தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், மற்றும் மத்திய அரசின் வெளிப்படைத்தன்மை குறித்து பாராளுமன்றத்தில் தீவிர உரையாடலை உருவாக்கும்.அதேசமயம், மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி கடுமையாக விமர்சிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கும் என்று கருதப்படுவதால், இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Pahalgam attack & operation Sindhu Intense debate in the parliament today