பாஜகவில் வலுவான உழைக்கும் நெறிமுறைகளால் ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய நிலையில் இண்டியா கூட்டணி உள்ளது: உமர் அப்துல்லா..! - Seithipunal
Seithipunal


கூட்டணியில் உள்ள உட்பூசல்கள் மற்றும் பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறதாகவும், அது அவசர சிகிச்சை பிரிவான ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

டில்லியில் இன்று நடைபெற்ற ஆங்கில நாளிதழ் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியாதாவது:இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இண்டியா கூட்டணியின் இந்த தொடர் தோல்விக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியதும், பீஹாரில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் முக்கிய பிரச்சினையாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாஜவில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறதாகவும், அந்த வேகத்துடன் பாஜ ஒவ்வொரு தேர்தலிலும் உறுதியுடன் போட்டியிடுகிறது. அதேவேளையில் இண்டியா கூட்டணியில் கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரிய வருகிறத என்றும் காஸ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Omar Abdullah says India alliance is in danger of being shifted to ICU


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->