கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறுமியர்: சட்டவிரோத மதரஸாவில் இருந்து மீட்பு..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிய மதராசாவில் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறுமியர்களை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் பஹ்ரைச் மாவட்டத்தின் பஹால்வாரா பகுதியில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில், இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் 'மதரசா' பள்ளி சட்டவிரோதமாக இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.

புகாரின்படி,  மாவட்ட துணை ஆட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள், அக்கட்டடத்தில் திடீர் ஆய்வு செய்ய செய்துள்ளனர். இதையறிந்த மதரசா நிர்வாகிகள், ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால், போலீசார் உதவியுடன் அக்கட்டடத்துக்குள் அதிகாரிகள் புகுந்து  ஆய்வு நடத்தியுள்ளனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மாடியில் இருந்த கழிப்பறை பூட்டப்பட்டு இருந்ததையடுத்து, கழிப்பறையை போலீசார் உடைத்துள்ளனர். அதில் 09 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 40 அச்சத்துடன் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.இந்த சட்டவிரோத மதரசா தொடர்பில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஹால்வாரா பகுதியில் இந்த மதரசா பள்ளி, மூன்று ஆண்டுகளாக அரசின் அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதரசா நிர்வாகிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Officials shocked after illegal madrassa in Uttar Pradesh locked 40 girls in toilet


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->