சிக்கிய கோடிக்கணக்கான பணம்! பிரதமர் மோடி போட்ட டிவிட்! - Seithipunal
Seithipunal



ஜார்க்கண்ட் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பாண்டே சாஹுவிற்கு சொந்தமான மது ஆலை மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வருமான வரித்துறையின் சோதனையில் ரூ.250 கோடி வரையிலான கணக்கில் வராத பணம் கிடைக்கும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பெளத் டிஸ்டிலரி மது ஆலையில் தொடங்கப்பட்ட சோதனையில் சிக்கிய பணம் இன்னமும் எண்ணப்பட்டு வருவதாகவும் சொஇல்லப்படுகிறது.

முப்பது பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட போதும் பணம் எண்ணும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் ரூ.200 கோடி கிடைத்து உள்ளதாகவும், மொத்தமாக ரூ.250 கோடி வரை பணம் இருக்கலாம் என அதிகாரபூர்வ தகவல்கள் வந்துள்ளான்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் இந்த பணம் கையகப்படுத்தப்பட்டது குறித்து தெரிவித்துள்ளதாவது, "நாட்டு மக்கள் இதனை பார்க்க வேண்டும், நேர்மையின் முகமாக இருக்கும் இந்தத் தலைவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். மக்களிடம் இருந்த திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும்,. இது மோடியின் வாக்குறுதி" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha Congress mp liquor factory raid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->