மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து.. யாரெல்லாம் போடக்கூடாது.!
Nose covid vaccine procedure
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பு மருந்து சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
அதில் பக்க விளைவுகளோ, விரும்பத்தகாத பிற விளைவுகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இதைப் பரிசீலித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், இந்த மூக்கு வழிதடுப்பு மருந்துக்கு அனுமதியை வழங்கியது. இதனையடுத்து அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மூக்கு வழியாக கொரோனா மருந்தை செலுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே 2 தவணை தடுப்பபூசி செலுத்தியவர்கள் மட்டுமே மருத்துவரிடம் சான்று பெற்று இந்த மூக்கு வழியான தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
English Summary
Nose covid vaccine procedure