ராமர் கோவில் கும்பாபிஷேகம் - கர்நாடகாவில் பொது விடுமுறையா? முதல்வர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலின் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலை திறந்து வைக்கிறார்.

இந்த விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சில மாநிலங்களில் பொது விடுமுறை அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் இன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவா்கள் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், முதல்மைச்சர் சித்தராமையா நேற்று துமகூருவுக்கு சென்றிருந்தார். அப்போது, அவரிடம் நிருபர்கள் அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி கர்நாடகாவில் பொது விடுமுறை விடப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பேசியதாவது, "அயோத்தி ராமர்கோவில் திறப்பு விழா நாளை (அதாவது இன்று) நடக்கிறது. இதனை முன்னிட்டு கர்நாடகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் விசேஷ பூஜைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆனால் பொதுவிடுமுறை அறிவிக்க மாட்டோம். யாருக்கும் அரசு பொது விடுமுறை கிடையாது. பெங்களூரு மகாதேவபுராவில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலை நான் திறந்து வைக்கிறேன். அந்த விழாவுக்கு என்னை அழைத்துள்ளனர். அதில் நான் கலந்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no holiday in karnataga state for ramar temple kumbabhishegam cm siddharamaiya announance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->