பாரம்பரிய முறைப்படி "அல்வா" வழங்கினார் நிர்மலா சீதாராமன்.!! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை காகிதங்களில் அச்சிடுவது வழக்கம். அவ்வாறு காகிதங்களில் அச்சிடப்பட்ட மத்திய பட்ஜெட் ஆனது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டது.

மத்திய பட்ஜெட் தயாரிப்பு டிஜிட்டல் முறைக்கு மாறினாலும் பழங்கால வழக்கப்படி பட்ஜெட்டை தயாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கும் சம்பிரதாயம் மட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள நித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.

மத்திய பட்ஜெட்  தயாரிப்பில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் தற்காலிகமாக தனிமைப்படுத்துவார்கள். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் கசிந்து விடக்கூடாது என்பதற்காக வெளி உலக தொடர்பை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala Sitharaman served traditional Alva


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->