குளிர்கால கூட்டத்தொடர் - நாடாளுமன்றத்தில் 9 மசோதாக்கள் நிறைவேற்றம் - மத்திய அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 7ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்தது. இந்த கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து நடைபெற்ற பதின்மூன்று  அமர்வுகளில், மக்களவையில் ஒன்பது மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அதில் ஏழு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒன்பது மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, 

"இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களில் வனவிலங்கு திருத்த மசோதா, 2022, எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா, 2022, புது தில்லி நடுவர் மன்றம் திருத்த மசோதா, 2022, அரசியலமைப்பு ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022, கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2022, அரசியலமைப்பு ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 மற்றும் அரசியலமைப்பு ஆணை (நான்காவது திருத்தம்) 2022 உள்ளிட்ட மசோதாக்கள் அடங்கும். 

மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வாரம் குறைக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine bills passed in pariment winter session meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->