தானேவில் 5 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதியில் இருந்து கொரோன பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனைகளில் இதுவரைக்கும் 5 பேருக்கு ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தானேவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆகும். இதில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், ஒரு பெண் உள்பட ஐந்து பேருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new variety corona found five peoples in maharastra thane


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->