ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியலில் புதிய விதிகள்; இந்திய ரயில்வே அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியலில் புதிய விதிகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சில குறிப்பிட்ட ரயில்களுக்கான பயண டிக்கெட் நிலை விதிகள் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகளால் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள், தங்கள் டிக்கெட் உறுதியாகவில்லை என்ற நிலையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 புதிய முன்பதிவு பட்டியல் தயாரிக்கும் நேரங்கள்:

காலை 05:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு பட்டியல், முந்தைய நாள் இரவு 8:00 மணிக்குத் தயார் செய்யப்படும்.

அத்துடன், மதியம் 02:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு பட்டியல், ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயார் செய்யப்படும்.

இதற்கு முன்னர், ரயில் புறப்படுவதற்கு 04 மணி நேரத்திற்கு முன்பே முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

புதிய விதிமுறைகளை பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி கீழ்கண்ட வழிகளில் தங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் செக் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பகுதிக்குச் சென்று சரிபார்க்கலாம். 

உங்கள் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை 139 அல்லது 5676747 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

எந்தவொரு போனிலும் 139 என்ற எண்ணை அழைத்து நிலையை அறியலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New rules for train ticket reservation list


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->