டிசம்பர் முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் – ஆதார், பான், ரேஷன் கார்டில் முக்கிய மாற்றங்கள்!மறக்காம நோட் பண்ணிக்கோங்க மக்களே.. - Seithipunal
Seithipunal


2025-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் 1 முதல், நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. குறிப்பாக ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரும் அவற்றை கவனிக்க வேண்டியது அவசியம்.

பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி டிசம்பர் 31. இந்த தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், 2026 ஜனவரி 1 முதல் உங்கள் பான் எண் செயலிழக்கும்.

பான் எண் செயலிழந்தால் சம்பள ஒதுக்கீடு, வங்கிகளில் முதலீடு, வரி செலுத்துதல் உள்ளிட்ட பல நிதி செயல்பாடுகள் தடை செய்யப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

டிசம்பர் மாதம் முதல் ஆதார் அட்டையின் வடிவத்தில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. UIDAI பரிசீலித்து வரும் திட்டத்தின் படி, ஆதார் அட்டை 'புகைப்படம் + QR கோடு' வடிவில் மட்டுமே வழங்கப்படும். அதாவது முகவரி போன்ற தகவல்கள் அட்டையில் இருக்காது.

UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார், ஆதார் அட்டையை பல இடங்களில் நகலெடுத்து கொடுத்த போது மோசடிகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். எனவே அட்டையை அச்சிட்டு வழங்குவதை தடுத்து, சுருக்கமான ‘புகைப்படம் + QR கோடு’ வடிவத்துக்கு மாற்றும் திட்டம் ஆராயப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

ரேஷன் கார்டு வைத்திருப்போர் அனைவருக்கும் ஆதார் மறு சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களது கைரேகையை பதிவு செய்து e-KYC-ஐ முடிக்க வேண்டும்.
டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் தானியங்கி தணிக்கை தொடங்கப்பட்டு, நகல் ரேஷன் கார்டுகள், தகுதியற்ற கார்டுகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படும். ஒரே குடும்பம் பல இடங்களில் சலுகை பெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டு தொடர்பான இந்த மாற்றங்கள் பொதுமக்களிடம் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். காலக்கெடுவிற்கு முன் தேவையான செயல்முறைகளை முடித்துக் கொள்ள அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New rules coming into effect across the country from December Important changes in Aadhaar PAN and ration card


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->