செவிலியர் கையில் இருந்து தவறி விழுந்து குழந்தை பரிதாப பலி.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


செவிலியர் கைகளில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அந்த குழந்தை செவிலியரின் கைகளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது கடந்த 19ஆம் தேதி எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு இதன் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனால் குழந்தை இறந்து பிறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் என்னிடம் தெரிவித்தனர்.

என் மனைவி என்னிடம் பேசியபோது அவருக்கு சுகப் பிரசவம் ஆனதாகவும் உயிருடன் இருப்பதை பார்த்ததாகவும் பின்னர் செவிலி ஒருவர் குழந்தையை எந்த விததுணியும் இன்றி எடுத்து சென்ற போது அவர் தன் கையில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிர் இருந்ததாகவும் தெரிவித்தார்.

 இதனை கண்டு அவர் கத்திய போது அவரை மிரட்டி உள்ளதாகவும் புகாரி அவர் குறிப்பிட்டிருந்தார் இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயம் தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்பது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new born baby death in Uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->