மகாராஷ்டிரா || மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு - முதலமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புனே மற்றும் அவுரங்காபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால், பயிர்கள் சேதமாகின. 

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அம்மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும்  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர். 

இந்தநிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

"கடந்த மூன்று மாதங்களில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநில அரசு 72 பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. அதில் போர்க்கால அடிப்படையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளேன். 

இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். அவர்கள் எப்போதும் கைவிடப்படமாட்டார்கள். மாநில அரசு விவசாயிகளுக்கு எல்ல வகையிலும் ஆதரவாக இருக்கும். மேலும் நாக்பூர் - ஷிரடி சாம்ருதி இடையே அமைக்கப்பட்ட விரைவு சாலை அடுத்த மாதம் திறக்கப்படும்" என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra Farmers compensated chief minister alounce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->