கர்நாடகா : டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்த வடமாநிலத்தவர்கள்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கவுகாத்தி செல்லும் பெங்களூரு விரைவு ரெயிலில் பயணசீட்டு எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறி அமர்ந்துள்ளனர்.

மேலும், அவர்கள் பயணசீட்டு எடுத்து பயணம் செய்பவர்களுக்கு இடம் கொடுக்காமல் நான்கு பேர் அமரக்கூடிய இடத்தில் ஏழு பேர் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து, அடாவடி செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் ரெயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, திருவொற்றியூரில் ரெயில் நிறுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, ரெயிலில் உள்ள அனைத்து முன்பதிவு பெட்டிகளிலும் ஆய்வு மேற்கொண்டு பயணசீட்டு எடுக்காமல் இருந்த சுமார் 1000 வடமாநிலத்தவர்களை எச்சரித்து ரெயிலில் இருந்து வெளியேற்றினர். இதில், பல பெண்களும் பயணசீட்டு எடுக்காமல் ஒரே சீட்டில் முடங்கிக்கொண்டு பயணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதன் படி, கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தில் கூடி நின்றதால் ரெயில் நிலையமே சந்தைக்காடாக காட்சியளித்தது. மேலும், இதுபோன்று தொடர்ந்து நடந்தால், ரெயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணசீட்டு எடுத்து பயணிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga north indians train travel without ticket


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->