கர்நாடக : லஞ்சம் வாங்கிய பெண் காவலர்.! கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம் உரிகம்பேட்டை பிஷ் லைன் பகுதியை சேர்ந்தவர் சையத் யூசூப். இவருக்கும், இவருடைய உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் குறித்து சையத் யூசூப் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் உதவி துணை தலைமை காவலர் பரிதா பானு சையத் யூசூப்பை மிரட்டி உன் மீது தான் தவறு உள்ளது. எனவே, உன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதன் படி, சையத் யூசூப் கடந்த 12-ந் தேதி காவல் உதவி துணை தலைமை காவலர் பரிதா பானுவிடம் ரூ.1,500-ஐ கொடுத்துள்ளார். இது போதாது, வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். 

இதில், முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்தை சையத் யூசூப் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சையத் யூசூப்பிடம் லஞ்ச பணத்தை தருமாறு பரிதா பானு செல்போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சையத் யூசூப் இந்த லஞ்சம் குறித்து கோலாரில் உள்ள லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தைக் கொடுத்து, காவல் உதவி துணை தலைமை காவலர் பரிதா பானுவிடம் கொடுக்கமாறு தெரிவித்தனர். 

அதன் படி, சையத் யூசூப்பும், காவல் உதவி துணை தலைமை காவலர் பரிதா பானுவை சந்தித்து பாக்கியுள்ள லஞ்சப்பணத்தை கொடுத்துள்ளார். பரிதா பானுவும் அந்த பணத்தை வாங்கினார். 

அப்போது அங்கு மறைந்திருந்த லோக்அயுக்தா போலீசார், பரிதா பானுவை பிடித்து கைது செய்தனர். மேலும், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karanataga woman police officer arrested for bribe


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->