இரும்புப் பொருட்களைத் திருடிய சிறுவர்கள்.! அரை நிர்வாண முறையில் இழுத்துச் சென்ற அவலம்.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ள கர்வான் கிராமத்தில் இரும்பு கதவு ஒன்றில் இருந்த இரும்பு பொருட்களை மூன்று சிறுவர்கள் திருடி சென்றுள்ளனர். இதையறிந்த அதன் உரிமையாளர் கிராம பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, அந்த கிராமத்தில் வசிக்கும் ரத்தன் சிங் என்பவர் தெரிவித்ததாவது, "சிறுவர்கள் இரும்பு பொருட்களைத் திருடிய பின்னர், அந்தப் பொருட்களை பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் கடைக்கு, விற்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ளவர்கள் அவர்களை பிடித்து பஞ்சாயத்துக்கு அழைத்து சென்றனர்" என்றுத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பஞ்சாயத்தில், சிறுவர்களின் பெற்றோரை அழைத்து வறுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதன் படி, அவர்கள் அனைவரும் வந்ததும் விசாரணை தொடங்கியது. அந்த விசாரணையில்,  இரும்பு பொருட்களை திருடிய விவரங்களை மூன்று சிறுவர்களும் ஒப்பு கொண்டனர். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள், சிறுவர்களுக்கு ஒரு பாடம் புகட்டும் வகையில் உரிய தண்டனையை தரவேண்டும் என்று பஞ்சாயத்தில் கேட்டு கொண்டனர். அதன் படி, சிறுவர்கள் மூன்று பேரையும் அரை நிர்வாண கோலத்தில் தெருவில் இழுத்து செல்லும்படி பஞ்சாயத்தில் உத்தரவு வெளிவந்தது. 

இதைத்தொடர்ந்து, சிறுவர்களும் கிராமத்தில் உள்ள தெருவின் வழியே அரை நிர்வாண ஊர்வலத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இதனை கிராமத்தில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்தபடி வீடியோவாக எடுத்துள்ளனர். 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணையில் மேற்கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near hariyana three boys walking street without dress for steal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->