"கடற் படை பயிற்சியில் நடுவானில் செயலிழந்த பாராசூட்.! கடற்படை வீரர் பரிதாபமாக பலி!! - Seithipunal
Seithipunal


ஹெலிகாப்டரில் இருந்து குதித்து பயிற்சி செய்து கொண்டிருந்தபோது பாராசூட்  நடுவானில் செயலிழந்ததால் ஆந்திராவைச் சார்ந்த கடற்படை அதிகாரி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தரக  கோவிந்த் (31) இவர் விசாகப்பட்டினத்தில் கடற்படை கமாண்டோவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேற்குவங்கத்தில்  ஹெலிகாப்டரிலிருந்து கீழே குதித்து பயிற்சி செய்து கொண்டிருந்தபோது  நடுவானில் வைத்து பாராசூட் செயலிழந்ததால் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாங்குரா மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலை வாயிலில் அவரது உடலானது கண்டுபிடிக்கப்பட்டது. உடலோடு சேர்ந்து பாராசூட்ட இணைந்திருப்பதை அறிந்த காவல்துறையினர் அவரை ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர்.

விபத்தில் இறந்த அதிகாரி சந்தரகா கோவிந்துக்கு கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களும் அஞ்சலி செலுத்தினர்.  இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இவரது உடல் நாளை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு ராணுவம் மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

navy force commander died due to the malfunction of paraheute


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->