தேசிய விண்வெளி தினம்!.
இந்தியாவில் தேசிய விண்வெளி தினம் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
..சந்திரயான்-3 இன் லேண்டர் மற்றும் ரோவரை நிலவில் 2023 ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.
.இதன் மூலம், நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா ஆனது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதன் மூலம் சாஃப்ட் லேண்டிங் ஆனது. இந்த சாதனையை அங்கீகரித்த பிரதமர் நரேந்திர மோடி , ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இந்தியாவில் "தேசிய விண்வெளி தினமாக" அறிவித்தார்.

அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்!.
ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி நள்ளிரவுமுதல் 23 ஆம் தேதி வரை போராடினர்.
அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.