என்னது.! வாக்களித்தால் தேர்வு எழுத முடியாதா? தேசிய தேர்வு முகமை விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தேர்தலில் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்படும் மை காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படாது என்று வதந்தி பரவி வரும் நிலையில் இது தொடர்பாக பேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. 

நீட் தேர்வு போன்ற தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்கள் விரலில் மை இருக்கக் கூடாது என்பது வதந்தி. விரலில் மையுடன் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு மையங்களில் நுழைய தடை விதிக்கப்படும் என்ற தகவலும் உண்மைக்கு மாறானது. 

சமூக வலைதளங்களில் இதுபோல் பரவி வரும் தகவல் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் ஆதாரம் அற்ற இந்த செய்திகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேசிய தேர்வு முகவை தெரிவித்துள்ளது. 

மேலும், தேர்வு எழுதுபவர்கள் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும். இதனால் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதே சமயத்தில் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Examination Agency explain voter write exam 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->