ஜம்மு‌ எய்ம்ஸை இன்று திறக்கிறார் நரேந்திர மோடி.!! - Seithipunal
Seithipunal


 ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வரும் நிலையில்  மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில் ஜம்மு பகுதியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து மௌலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதேபோன்று வரும் பிப்ரவரி 26ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மங்களகிரி, பதிந்தா ரேவலி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

ஜம்முவில் 227 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதே காலகட்டத்தில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi inaugurates Jammu AIIMS today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->