''தர்மமே வெல்லும்''! திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிபதிகளின் உத்தரவை வரவேற்றயுள்ள முரளிதர் மொஹோல்..!
Muralidhar Mohol welcomes the judges order in the Thiruparankundram Deepam issue
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை இந்து அறநிலையத்துறை செய்யத்தவறிய சூழலில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நேற்றைய கார்த்திகை மஹா தீபம் ஏற்றவிடாமல் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், அரசு நிர்வாகம் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்கும் நிலையில் தான், சி.ஐ.எஸ்.எப்., படையினரை தனி நீதிபதி உதவிக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, சட்டப்படியான கடமையான மாநில போலீசார் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 144 தடை உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று (டிசம்பர் 04) இரவு 07 மணிக்குள் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் ஒத்துழைப்புத் துறை இணையமைச்சர்,| புனே நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் புனேவின் மேயரான பாஜகவின் முரளிதர் மொஹோல் நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பை உறுதி செய்த மாண்புமிகு இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பைவரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தர்மமே வெல்லும்! வெற்றிவேல்! வீரவேல்!''
'திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, மாண்புமிகு தனி நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பை உறுதி செய்த மாண்புமிகு இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழ் இந்துக்கள் மற்றும் பாரதமெங்கும் உள்ள முருகப் பெருமான் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் திமுக அரசின் சூழ்ச்சியும் சதித்திட்டங்களும் முறியடிக்கப்பட்டுள்ளன. வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில்
ஆளும் திமுக அரசு தனது பாவங்களுக்கு விலை கொடுக்கும். இந்தப் போராட்டத்தில் உறுதியாக நின்று தர்மத்தின் வழியில் வெற்றி கண்ட அனைத்து இந்து செயற்பாட்டாளர்களுக்கும், தலைவர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Muralidhar Mohol welcomes the judges order in the Thiruparankundram Deepam issue