ஆ.. படத்தை அனுப்பிவிட்டு, முகபாவனை பதிவு.. அரசியல்வாதிகளை டார்கெட் வைத்து தாளித்தெடுத்த கும்பல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த தகவலில், ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலந்தை சார்ந்த கும்பல், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் போன்ற பல அரசியல் முக்கிய புள்ளிகளை குறிவைத்து வருகிறது. 

இவர்களின் முக்கிய நோக்கம் ஆபாச படம் மூலமாக பணம் பறிப்பது மட்டும் தான். எடிட் செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் மூலமாக முக்கிய புள்ளிகளை மிரட்டி வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். 

தனிப்படை காவல் துறையினர் அக்கூட்டத்தை சார்ந்த 3 பேரை கைது செய்த நிலையில், மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், " சமூக வலைத்தளங்களில் பெண்களின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கி, அரசியல் புள்ளிகளுக்கு வாட்சாப் மூலமாக தொடர்பு கொள்வோம். 

பின்னர், அதில் பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வைத்து, அவர்களை பார்க்க வைப்போம். அவர்கள் அதனை பார்க்கும் போது, அவர்களின் முகபாவனையை எங்களது தொழில் நுட்பம் மூலமாக பதிவு செய்வோம். இதன்பின்னர், அவர்கள் ஆபாச படங்களில் நடித்துள்ளது போல எடிட் செய்யப்பட்ட விடியோவை அவர்களுக்கு அனுப்பி பணம் கேட்போம் " என்று பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai Cyber Crime Police Discovered Trapping Porn video Money Torture Gang


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->