ஜியோ நிறுவன தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்.! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் ஜியோ இயக்குனராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த 2016ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக மாறியது. 

இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் பெரும் லாபம் ஈட்டி வருகிறது. ஜியோ நிறுவனத்தின் 2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு நிகர வருவாய் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.4,313 கோடியாக அதிகரித்திருந்தது.  

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக இருந்துவந்த முகேஷ் அம்பானி அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து ஜியோ நிறுவன தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mukesh Ambani's son Akash Ambani appointed chairman of jio


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->