ச்சீ ச்சீ இப்படியும் ஒரு தாயா? தனது 2 1/2 வயது குழந்தையை கொடூர கள்ளக்காதலனிடம் விட்ட தாய்...! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் மும்பையின் மால்வானி பகுதியை சேர்ந்த ரீனாஷேக் என்பவர், தனது  2½ வயது பெண் குழந்தையுடன் கணவரை பிரிந்து தனித்து வாழ்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த பெண்மணி, தனது குழந்தையை மயங்கிய நிலையில் அப்பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவர், தனது குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு மூச்சு திணறி மயங்கி விழுந்ததாகவும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.சற்றும் எதிர்பாராமல், சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. அப்போது குழந்தையின் அந்தரங்க பகுதியில் கடுமையான காயங்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, நடந்த பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதில் மூச்சு திணறி இறந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக  மருத்துவமனை தரப்பில் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.இந்தச் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் குழந்தையின் தாயார் ரீனாஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது ரீனாஷேக்குக்கும், பர்கான் ஷேக் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பர்கான்ஷேக், ரீனாஷேக்கின் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதில் குழந்தை மூச்சு திணறி இறந்ததும் அம்பலமானது.

மேலும் தனது காதலனின் கொடூர செயலை ரீனாஷேக் வேடிக்கை பார்த்ததும், அவர் குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து பர்கான்ஷேக், ரீனாஷேக் ஆகியோர் மீது காவல்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இச்சம்பவம் வட இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mother who left her 2 1/2 year old child to a cruel murderer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->