'அம்மா ஏதோ கடிக்குது'... விளையாட்டாக நினைத்த பெற்றோர்...! - விடிந்தபோது சடலமாகக் கிடந்த சிறுவன்...!
Mom is biting something Parents thought it joke boy who found dead dawn
கேரளம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழந்த இந்த நிகழ்வு மனதை உருக்கும் வகையில் உள்ளது.
அப்பகுதியை சேர்ந்த சில்ஜோ மற்றும் ஜோண்ஷி தம்பதியரின் இரு மகன்கள் அனோத் (10), ஆல்ஜோ (8). சம்பவத்தன்று இரவு, இருவரும் தங்களது அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

சில நேரம் கழித்து திடீரென விழித்துக் கொண்ட ஆல்ஜோ, “எதோ ஒன்று என்னை கடித்துவிட்டது” என்று கூறியதுடன், உடல் வலி மற்றும் வாந்தி உணர்வு இருப்பதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பெற்றோர், “காலை பார்த்துக் கொள்ளலாம்” என கூறி மீண்டும் தூங்கச் சொல்லியுள்ளனர்.
மறுநாள் காலை ஆல்ஜோவை எழுப்ப முயன்றபோது, அவர் எந்தச் செயல்பாடும் இன்றி அசைவற்ற நிலையில் கிடந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து சந்தேகத்தால் அறையை சோதனை செய்தபோது, ஆல்ஜோ படுத்திருந்த தலையணையின் கீழ் சுமார் 2 அடி நீளமுடைய கட்டுவிரியன் பாம்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி தகவல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சிறிய கவனக்குறைவு எப்படி பேரிழப்பாக மாறுகிறது என்பதை உணர்த்தும் இந்த துயர சம்பவம், பொதுமக்களிடையே எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.
English Summary
Mom is biting something Parents thought it joke boy who found dead dawn