15 ஆண்டு கால ஆப்பிள் நிறுவன தலைமையிலிருந்து டிம் குக் விலகல்...! - யார் இந்த ஜான் டென்னஸ்...?
Tim Cook steps down from Apple CEO role after 15 years Who this John Dennis
உலகளவில் மின்னணு சாதனங்கள் மற்றும் மென்பொருள் துறையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனம், தனது புதுமையான தயாரிப்புகளால் கோடிக்கணக்கான பயனாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

ஐபோன், ஸ்மார்ட் வாட்ச், டிவி உள்ளிட்ட சாதனங்கள் உலக சந்தையில் தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளன.இந்த முன்னணி நிறுவனத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் திறமையாக வழிநடத்தி வரும் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவராக கருதப்படுகிறார்.
அவரது தலைமையில் நிறுவனம் பல புதிய உயரங்களை எட்டியதுடன், தொழில்நுட்ப உலகில் தனது ஆதிக்கத்தையும் வலுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் உச்ச பதவியில் இருந்து டிம் குக் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜான் டென்னஸ் பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றம், உலக தொழில்நுட்ப துறையில் புதிய எதிர்பார்ப்புகளையும், ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
English Summary
Tim Cook steps down from Apple CEO role after 15 years Who this John Dennis