ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமே இதுதான்.! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பூமி பூஜை நிகழ்வில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர். 

அயோத்தியில் 67 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ராமர் கோவில் அமைகிறது. நகரா என்று அழைக்கப்படும் கோவில் கட்டிடக்கலை பாணியில் ராமர் கோவில் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து முக்கிய பிரமுகர்கள் பலரும், ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்த தருணத்திற்கு எத்தனையோ பேர் பல தியாகம் செய்துள்ளனர். கோவில் அறக்கட்டளை இனிமேல் கோவில் கட்டும் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் இதற்கு காரணமாய் இருந்த மோடிக்கு வாழ்த்து கூறியும் வருகின்றனர். 

இந்த நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமே நாட்டு மக்களை ஒன்றுபடுத்த தான் என்றும், இந்தியாவின் அடையாளமான ஒற்றுமை, இறையாண்மையை நிலைநாட்டவும் தான் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi said ramar mandir makes unity 


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal