காலை உணவுக்கு முன்பே வாக்களித்த பீகார் மக்கள் - நன்றி கூறிய பிரதமர் மோடி!
Modi PM election Bihar 2025 voter
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு 121 தொகுதிகளில் தொடங்கியது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவில், “பிகாரில் ஜனநாயகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் உற்சாகத்துடன் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் நண்பர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள். நினைவில் கொள்ளுங்கள் – முதலில் வாக்களிப்பு, பின்னர் காலை சிற்றுண்டி!” என கூறியுள்ளார்.
இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் ஆர்.ஜே.டி தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. என்டிஏவில் பாஜக, ஜேடியூ, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய ஐந்து கட்சிகளும் உள்ளன. இந்தியா கூட்டணியில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரி கட்சிகளும் இணைந்துள்ளன.
மேலும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் தன் ஆதிக்கத்தைச் சோதிக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும். அனைத்து வாக்குகளும் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
English Summary
Modi PM election Bihar 2025 voter