பிறந்த நாள் அன்று மாடல் அழகி மர்ம மரணம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


பிறந்த நாளன்று மாடல் அழகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம், செருவத்தூரை சேர்ந்தவர் சஹானா. அவர் மாடலாக இருந்து வந்தார். இவர்சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் சேர்ந்து மாமியார் மற்றும் மைத்துனர் தன்னை சித்திரவதை செய்வதாக கூறி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனால், தனிக்குடித்தனம் செல்ல கூறியுள்ளனர். இதனை அடுத்து கோழிக்கோடு நகரின் பரம்பில் பஜாரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர். இந்நிலையில், அவரது பிறந்தநாளில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்திற்கு தகவல் வந்தது.

இதுகுறித்து அவர் பெற்றோர் தெரிவிக்கையில், மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை எனவும் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.  காவல்துறையினர் தரப்பில்தெரிவிக்கையில், குளியலறையில் பிளாஸ்டிக் கயிறு இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம் ஆனால் அது தற்கொலை செய்ய போதுமானதாக இல்லை எனவும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Model death in Kerala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal