மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிளக்கு விடுமுறை கிடையாது - அமைச்சர் ஸ்மிரிதி இரானி.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத் தொகுதியின் மக்களவை எம்.பி. வெங்கடேசன், மத்திய அரசில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

இந்தக் கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்தப் பதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 

"மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் மத்திய அரசுப்பணிகளுக்கான விதிகள்-1972-ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. அதனால், இந்த விதிகளில் அத்தகைய விடுமுறையை சேர்ப்பதற்கு தற்போது எந்த ஒரு முன்மொழிவும் இல்லை. 

மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புகளில், அரை ஊதிய விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, குழந்தைப்பராமரிப்பு விடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவச்சான்றிதழ் விடுப்பு மற்றும் நிலுவையில்லா விடுப்பு என்று ஏற்கனவே பல விடுமுறைகள் கிடைக்கின்றன" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister smiriti irani answer in parliament for menstruction leave of central govt woman employee


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->