#சென்னை : ஹோலி கொண்டாட்டத்தில் பயங்கரம்.! விடுதி பொறுப்பாளருக்கு வட மாநில இளைஞரால் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நாடெங்கிலும் ஹோலி பண்டிகை  சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையின் போது ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் ஹோலி பண்டிகைகள் கொண்டாட்டத்தின் போது மது போதையில் அதிக சத்தத்துடன் இசையை வைத்து ஹோலி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அதனை தட்டி கேட்ட விடுதியின் பொறுப்பாளரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில்  பணியாற்றி வந்த வட மாநில இளைஞர் சோனு. இவர் ஹோலி பண்டிகையின் போது மது போதையில் அதிக அளவு சத்தத்துடன் இசையை ஒலிக்கவிட்டு ஹோலி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். இசை சத்தம் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். அதனால் சத்தத்தை குறைக்கும்படி அவரிடம் கூறியிருக்கிறார் விடுதியின் பொறுப்பாளர் கதிர்வேல்.

இது தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்திருக்கிறது. அப்போது மது போதையில் இருந்த வடமாநில இளைஞர் சோனு காய்கறி வெட்டும் கத்தியால் கதிர்வேலுவின் மார்பில் வெட்டியதுடன் தனது கைகளையும் வெட்டியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

migrant worer stabbed a lodge administration during an argument over holi celebrations


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->