வரலாற்றிலேயே நடக்காத சம்பவம், நாய்க்கு முழு அரசு மரியாதை செய்த பாதுகாப்புப்படை.!  - Seithipunal
Seithipunal


டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின், சிஐஎஸ்எப் பிரிவில் பணியில் இருந்த 7 நாய்கள், பணி ஓய்வு பெறும் விழா டெல்லியில் நடைபெற்றது.

கடந்த 8 ஆண்டுகளாக துணை பாதுகாப்பு படையில் பணியாற்றிய இந்த 7 நாய்களுக்கும் தற்போது பணிஓய்வு பெற்றுள்ளன. நாய்களுக்காக  பணி ஓய்வு பெறுவதற்க்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் அவற்றுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் ஓய்வு பெற்றன.

விழாவுக்கு முன் அழைத்து வரப்பட்ட நாய்களுக்கு வீரர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். இந்தியாவில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வரலாற்றிலேயே, நாய்கள் ஓய்வு பெறுவதற்கு விழா நடத்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train dogs retirement


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal