மத்திய பிரதேசம் || பலாத்கார வழக்கு பதிவுக்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உமங் சிங்கார். இவர் மீது நேற்று மாலை நாவ்காவன் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரில், உமங் தன்னுடைய மனைவி போல் என்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எம்.எல்.ஏ. உமங் தெரிவித்ததாவது, "கடந்த 2-ந்தேதி அந்த பெண்ணுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளேன்.
என்னை மனரீதியாக துன்புறுத்தி, மிரட்டினார். என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்வேன் என்று அச்சுறுத்தியதுடன், ரூ.10 கோடி தரவேண்டும் என்று கேட்டு வற்புறுத்தினார் என்று உமங் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பா.ஜ.க.வின் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா தெரிவித்ததாவது, "முன்னாள் அமைச்சர் உமங்கின் மனைவி, திருமணம் செய்கிறேன் என்று கூறி தன்னை உமங் பலாத்காரம் செய்து, மனரீதியாக துன்புறுத்தியுள்ளார் என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

உமங்கிற்கு கடந்த காலங்களில் வேறு சில மனைவிகளும் இருந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mathyapradesh congrass mla umang avoid sexual harassment case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->