பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!
Is blackmailing also the job of the Maharashtra Chief Minister Chief Minister MK Stalin issues a strong condemnation
பாஜ எம்எல்ஏவை தேர்ந்தெடுத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
''பாஜ எம்எல்ஏவை தேர்ந்தெடுத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?. அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்கு தெரியுமா?
தெரியாவிட்டால் கேட்டு தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் என்ஜின் என்று நீங்கள் பீற்றும் டப்பா என்ஜின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடு தான் டபுள் டிஜிட்பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Is blackmailing also the job of the Maharashtra Chief Minister Chief Minister MK Stalin issues a strong condemnation