கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவது கேரளா ஆகும். கல்வி, அறிவியல், முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளா பெண் கல்வி, பெண்களின் சமூக முன்னேற்றம், பாலின சமத்துவம் என எல்லா விஷயங்களிலும் முற்போக்காக துணிச்சலுடன் சட்டம இயற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

பொதுவாக பெண்களின் கல்வி திருமணத்திற்கு பிறகு கேள்விக்குறியாகத் தான் உள்ளது. இதற்கெல்லாம் தீர்வாக மற்றும்  இன்னொரு மைல் கல்லாக கல்லூரி மாணவிகளுக்கும் மகப்பேறு விடுப்பு அளித்து  மற்றொரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் திட்டமானது கேரளாவில் உள்ள கோட்டயத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் தான் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண் கல்வியானது திருமணத்திற்கு பின்னும் தடைப்படாமல்  அவர்கள் தொடர்ந்து படிக்க பெரும் உதவியாக இருக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மகப்பேறு விடுப்பில் செல்லும் மாணவி தன் மகப்பேறு காலம் முடிந்த பின் மீண்டும் கல்லூரியில் தனது சக மாணவிகளுடன் இணைந்து அதே செமஸ்டரிலோ இல்லை அதற்கு அடுத்த செமஸ்டரில் தங்களின் கல்வியை தொடரலாம்.

இந்தத் திட்டமானது முதல் மற்றும் இரண்டாவது பிரசவத்திற்கு மட்டுமே பொருந்தும். மாணவிகள் தங்கள் விடுப்பிற்கான விண்ணப்பத்தை  உரிய மருத்துவ சான்றிதழ் உடன்  கல்லூரியின் முதல்வரிடமோ  அல்லது நிர்வாக தலைமையிடம்  விண்ணப்பித்து விடுப்பு  பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பல்கலைக்கழக சிண்டிகேட் கர்ப்பம் மற்றும் டியூபெக்டமியை மருத்துவ ரீதியாக நிறுத்தும் மாணவிகளுக்கு 14 நாள் விடுமுறை வழங்கவும் முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maternity leave for college students in kerala


கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பதுAdvertisement

கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது
Seithipunal
--> -->