ஒடிசா கருங்கல் குவாரியில் பெரும் பாறை விபத்து...! - தொழிலாளர்கள் சிக்கினர், உயிரிழப்பு அச்சம்
Massive rockslide Odisha granite quarry Workers trapped fears fatalities
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கருங்கல் குவாரியில் இன்று ஏற்பட்ட திடீர் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாறைகளை உடைக்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தபோது ஏற்பட்ட கடும் அதிர்வால், பெரும் பாறைகள் குவாரிக்குள் உருண்டு விழுந்தன.

இந்த சம்பவத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை சிலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Massive rockslide Odisha granite quarry Workers trapped fears fatalities