மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டாக நீடித்துவரும் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் போர் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கலவரம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 

இந்நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. 

இதில் மணிப்பூரை பொறுத்தவரை அங்குள்ள உள் மணி மணிப்பூர்வெளி மணிப்பூர் ஆக இரண்டு தொகுதிகளில் முதல் கட்டமாக பதிவு நடைபெற்றதும்.

இந்த வாக்கு பதிவின்போது சில வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தி சம்பவங்களும் நடைபெற்றது. 

இது குறித்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மொத்தம் 47 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் மணிப்பூரில் வருகின்ற 22 ஆம் தேதி 11 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த 11 வாக்கு சாவடிகளிலும் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற வாக்கு பதிவு செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur Repolling Election Commission announcement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->