நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை கட்டி பிடித்த நபர் - அதிர்ச்சியில் ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரியில் தொடங்கினார். 

இந்த யாத்திரையானது தமிழகத்தில் உள்ள குமரியில் இருந்து, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது. 

தற்போது இந்த யாத்திரை பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந்தேதி நடைபெற்ற நடைப்பயணத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால், அன்றைய தினம் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஜலந்தர் நகரில் இருந்து மீண்டும் நடைபயணம் தொடங்கியது. இந்த நிலையில், இன்று பஞ்சாப்பின் ஹோசியார்ப்பூர் பகுதியில் காலையில் நடைபயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை ஒருவர் ஓடி வந்து திடீரென கட்டி பிடித்துள்ளார். இதை பார்த்த கட்சி தொண்டர்கள் அவரை விலக்கி அப்புறப்படுத்தினர். இதனால், நடைப்பயணத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man tied up ragul gandhi in congrass padayatra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->