தற்கொலையை இன்ஸ்டாவில் லைவ் போட்டு காட்டிய வாலிபர் - டெல்லி போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


தற்கொலையை இன்ஸ்டாவில் லைவ் போட்டு காட்டிய வாலிபர் - டெல்லி போலீசார் அதிரடி.!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஷாரதா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், கடந்த சில மாதங்களாக அந்த நபர் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில், மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்ட அந்த நபர் நேற்று தன் வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதாவது, கத்தியால் தற்கொலை செய்துகொள்வதாக கூறி அந்த நபர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் லைவ் செய்துள்ளார். 

இதை பார்த்து அதிர்ச்சியடந்த அந்த நபரின் சகோதரி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றினார். 

ஆனால், அந்த நபருக்கு சில வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man live sucide attempt on instagram in delhi


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->