போலீசாரிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை தீ வைத்து கொளுத்திய போதை ஆசாமி.! - Seithipunal
Seithipunal


போலீசாரிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை தீ வைத்து கொளுத்திய போதை ஆசாமி.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் தலைமைத் தபால் நிலையம் சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த புலிசேரு சிவா என்பவர் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, தனது இருசக்கர வாகனத்தில் தீ வைத்தார். 

இதில் வாகனம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே போலீஸார் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவத்தால், மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர் போலீசாரிடம் வாகனத்தை தாம் ஓட்டி பிடிபடவில்லை என்று வாக்குவாதம் செய்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man fire to bike for escape from police telungana


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->