மருத்துவமனையில் டாக்டர் வேடத்தில் வந்த வாலிபர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் புராரி பகுதியை சேர்ந்தவர் அசுதோஷ் திரிபாதி. இவர் அதே பகுதியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சந்தேகத்தின் பேரில் மருத்துவர்களிடம் பிடிபட்டார்.

அப்போது அவர் மருத்துவர்கள் போல், ஸ்டெதஸ்கோப் மற்றும் மருத்துவரின் கோட் ஒன்றையும் வைத்திருந்தார். அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது திரிபாதி தன்னை ஒரு மருத்துவர் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது, அவர் தன்னை மருத்துவ மாணவர் என்று மாற்றி கூறியுள்ளார்.

இதைக்கேட்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் சம்பவம் குறித்து வடக்கு அவென்யூ போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில் போலீஸார் அங்கு வந்து திரிபாதியிடம் விசாரித்ததில், தான், திரிபாதி நீட் தேர்வுக்கு தயாராகி வருவதாகவும், கடந்த ஆண்டு தேர்வு எழுதி தோல்வியடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ராகுல் தாமிஜா அளித்த புகாரின் பேரில், அசுதோஷ் திரிபாதி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for doctor getup in delhi


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->