டெல்லி! 30 க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் 30க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபர்ஹான் கான் என்பவர் இணையதளத்தில் திருமண பதிவு மையத்தில் பல்வேறு போலி பெயர்களில் வரன் தேடுவதாக அறிவித்து பல மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் ஃபர்ஹான் கானை கைது செய்துள்ளனர்.

இதைைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது இதேபோல் 36 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும், பலரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும், ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தை பெற்ற உடன் அவர்களுடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் முறித்துக் கொண்டதாக விசாரணையில் ஃபர்ஹான் கான் ஒப்புக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for cheating more than thirty women


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal