ஓனர் மனைவியை கல்யாணம் பண்ணா பணக்காரன் ஆகிடலாம்.. ஓட்டுனரின் ரூட்.! மக்களே கவனம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை சார்ந்தவர் தீபக் ஜாதவ் (வயது 25). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில், கரிஷிமா என்ற 34 வயது பெண்மணி மற்றும் அவரது கணவர் ஐ.டி பணியை விட்டுவிட்டு சொந்தமாக சுயதொழில் செய்து வருகின்றனர். 

இவர்கள் வாங்கிய காருக்கு ஓட்டுநர் தேவைப்பட்ட நிலையில், தீபக் ஜாதவை ஓட்டுநராக நியமனம் செய்துள்ளனர். இதன்பின்னர், தினமும் ஜாதவ் முதலாளியின் மனைவி கரிஷ்மாவை காரில் அலுவலகத்திற்கு அழைத்து செல்வது, மீண்டும் வீட்டிற்கு கூட்டி வருவது என இருந்துள்ளார். 

இதன்போது, பணக்காரன் ஆக வேண்டும் என்று எண்ணிய தீபக், ஹரிஷிமாவை கடத்தி சென்று திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியுள்ளான். இதன்மூலமாக உனது சொத்துக்கள் எனக்கு வேண்டும் என்றும் கூறியுள்ளான். 

இதற்குள்ளாக, மனைவிக்கும், ஓட்டுனருக்கும் தொடர்பு கொண்டும் இருவரும் அலைபேசியை எடுக்காததால், கரிஷ்மாவின் கணவரை அங்குள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கரிஷ்மாவை தேடி வந்தனர். 

இந்நிலையில், 14 நாட்களாக கொடூரனின் பிடியில் இருந்த பெண்மணி, ஒருவழியாக அவனது பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார். இதனையடுத்து தீபக் ஜாதவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Mumbai Driver Kidnaps Owner Wife due to Property and Getting Shortly Richer Man


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal