தேசிய கல்வி கொள்கை; 01 முதல் 05-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது மகாராஷ்டிரா..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மராத்தி, ஆங்கிலம் வழி  பள்ளிகளில் 03-வதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 04-ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை 03-வது மொழியாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என  கூறப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 01-ஆம் வகுப்பில் 2025-2026-இல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

02, 03, 04 மற்றும் 06-ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-இல் அமல்படுத்தப்படும். 05, 09 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 08, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 2028-29-ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இந்தி திணிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 05-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை  அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra has suspended the order making Hindi compulsory from class 01 to 05


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->