மோசடி வழக்கு: மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் கைது!   - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரத் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பல் ஆகிய இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் சென்று மகாதேவ் என்ற சூதாட்ட செயலியை உருவாக்கினர். 

இதில் டென்னிஸ், பேட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மகாதேவ் செயலியின் உரிமையாளர் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்றது. 

இந்த விழாவில் இந்தி நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை வழங்கப்பட்டதாகவும் சூதாட்ட செயலி வாயிலாக ரூ. 6000 கோடி வரை மோசடி நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதன் அடிப்படை அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த புகார் தொடர்பாக மும்பையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

இந்த வழக்குகள் தொடர்பாக சூதாட்ட செயலி உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்திரகர் ராய்ப்பூர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஆஜரானார். 

இதனைத் தொடர்ந்து சூதாட்ட செயலியின் மற்றொரு உரிமையாளர் ரவி உப்பல் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் அவரை பிடிப்பதற்காக சர்வதேச போலீஸ் மூலம் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் ரவி உப்பல் துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . துபாயில் உள்ளூர் அதிகாரிகள் அமலாக்கத்துறை வழங்கிய ரெட்கார்னர் நோட்டீஸ் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பின்னர் ரவி உப்பலை இந்தியாவுக்கு கொண்டு வரக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahadev betting app case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->