திடீரென ரூட்டை மாற்றிய "மஹா"..! எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்.!! - Seithipunal
Seithipunal


தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில்., கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த வாரத்தின் போது புயல் ஒன்று உருவானது. 

இந்த புயலுக்கு "மகா" என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில்., இந்த புயல் வடமேற்கில் நகர்ந்து ஓமன் கடற்கரையை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது. நேற்றைய நிலவரப்படி இந்த புயல் டையூவிற்கு தென்மேற்கில் 550 கிலோ மீட்டர் தொலைவிலும்., வேரிவ் பகுதியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

இந்த புயல் ஓமனிற்கு சென்றுவிடும் என்று எதிர்பார்த்த வேளையில்., திடீரென திசைமாறி குஜராத் கடற்கரையை நோக்கி பயணிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்ததாவது., தற்போது தீவிரமடைந்துள்ள புயல் அதி தீவிர புயலாக மாறி வருவதாகவும்., இது துவாரகா மற்றும் டையூ இடையே வரும் ஆறாம் தேதி நள்ளிரவு மற்றும் ஏழாம் தேதி அதிகாலையில் குஜராத்தில் கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

heavy rain,

இதனால் வீசக்கூடிய காற்றின் வேகமானது 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும்., இதன் காரணமாக அங்குள்ள சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதியில் இருக்கும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும்., மகா புயலின் காரணமாக சௌராஷ்டிரா பகுதிகளில் இருக்கும் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டும்., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை கனமழை பெய்யலாம் என்றும்., அங்குள்ள வடக்கு மராட்டிய பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும்., கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்., சுற்றுலாப்பயணிகள் கடலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maha cyclone change path return to Gujarat


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->