பெண்களிடம் அத்துமீறிய ரோமியோஸ்.. வீதியில் வெளுத்தெடுத்தவாறே அழைத்து வந்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். எங்கு சென்றாலும் பாலியல் தொல்லை கொடுக்கவே காமுக எண்ணத்தை கொண்ட ஆண்கள் பெண்களை பின்தொடர்ந்து தொல்லை செய்து வருகின்றனர். 

நாடககாதல் தொல்லை, ஒருதலைக்காதல் தொல்லை, பாலியல் அத்துமீறல் என பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் உள்ளாகி வருகின்றனர். இதில், இளம் வயதுள்ள சிறுமிகள் மற்றும் கல்லூரி சென்று வரும் மாணவிகள் என திருமணம் முடிந்த பெண்களும், வயதான பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இவர்களை போன்றவற்றைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை வைரலாகி வருகிறது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தேவாஸ் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இளம் வயதுள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், பெண்களுக்கு சாலையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை அவ்வழியாக சென்ற காவல் துறையினர் கண்டுகொள்ளவே, விரைந்து சென்று இரண்டு இளைஞர்களையும் வீதியில் நடக்க வைத்து, பி.வி.சி பைப் கொண்டு விளாசியபடியே பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிறப்பான முறையில் கவனித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையிலும் அடைத்துள்ளனர். சாலையில் இரண்டு இளைஞர்களையும் அழைத்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh Police Condemned abused girl Romeos


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->