மக்களவைத் தேர்தல் எப்போது? டெல்லியில் இன்று ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


வரும் ஜூன் மாதத்துடன் இந்திய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த வருமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளும்  இந்திய தேர்தல் ஆணையம்  அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் இறுதிப்பட்டியல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் இன்று  மற்றும் நாளையென இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha election consultation in Delhi today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->